ஜாகிர் நாயக் மலேசிய குடிமகனா?

- Shan Siva
- 18 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 18:
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசிய குடியுரிமை
வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் கூறப்படும் கூற்றை உள்துறை அமைச்சர் சைபுதீன்
நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார்.
இது ஆறு
ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஒரு போலி இடுகை என்று சைபுதீன் FMT ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
அப்போது பெர்காசா
தலைவராக இருந்த இப்ராகிம் அலியிடம் இருந்து 'பஹ்லவான் பெர்காசா' விருதை ஜாகிர்
பெறும் புகைப்படம் அது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனிடயே 2017 ஆம் ஆண்டு இஸ்லாத்திற்கு
அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக பெர்காசா ஜாகிருக்கு விருது வழங்கியபோது
எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், அதற்கும் ஜாகிர்
நாயக்கிற்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதற்கும் எந்தத்
தொடர்பும் இல்லை என்றும் இப்ராஹிம் விளக்கமளித்துள்ளார்.
இது முழுமையான
அவதூறு என்றும், மேலும் மலேசியர்களைத் தவறாக வழிநடத்துவதையும், அரசியல்
காரணங்களுக்காக அவர்களைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டது என்றும் மலாய் உரிமைக்
குழுவான பெர்காசாவை 2008 இல் நிறுவிய
இப்ராஹிம் கூறினார்.
ஜாகிர் மலேசியாவின் நிரந்தரக் குடியிருப்பாளர் அந்தஸ்தைப் பெற்றவர். அவர் இங்கு குடியுரிமையை விரும்பவில்லை. மேலும் அவர் இந்தியாவுக்குத் திரும்புவதற்கு முன்பு எல்லாவற்றையும் சரிசெய்வதற்கான சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறார்" என்று இப்ராஹிம் கூறினார்.
மும்பையைச்
சேர்ந்த ஜாகிர் நாயக்கை, 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய அதிகாரிகள் பணமோசடி
மற்றும் வெறுப்பு பேச்சு மூலம் தீவிரவாதத்தை தூண்டியதாகக் கூறி தேடி வருகின்றனர்.
2015 இல் பாரிசான்
நேஷனல் அரசாங்கத்தால் ஜாகிருக்கு மலேசியாவில் நிரந்தர வசிப்பிட உரிமை
வழங்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு
கோத்தா பாருவில் ஒரு உரையின் போது நாட்டில் உள்ள இந்துக்கள் மற்றும் சீனர்களைப்
பற்றி சர்ச்சைக்குரிய அறிக்கைகளை ஜாகிர் பேசியதை அடுத்து மலேசியாவில் பேசுவதற்கு
அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும், கடந்த பிப்ரவரி 20 அன்று, அவரின் பொது உரைகளை வழங்குவதைத் தடுக்கும் எந்த உத்தரவும் தற்போது இல்லை என்று சைபுதீன் கூறியிருந்தார்!
Menteri Dalam Negeri, Saifuddin Nasution menafikan dakwaan bahawa pendakwah kontroversi, Zakir Naik diberikan kewarganegaraan Malaysia. Zakir hanya memiliki status penduduk tetap sejak 2015. Beliau masih dikehendaki di India atas tuduhan pengubahan wang dan ucapan kebencian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *