மக்கள் பிரச்சனையை எழுதிய பத்திரிக்கையாளருக்கு SENATOR SARASWATHY நிதியுதவி!

top-news
FREE WEBSITE AD

கடந்த 2015 இல் பத்துமலை ஆலயத் தலைவரும் தாய்க்கோயில் மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவருமான TAN SRI NADARAJAH மீது வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அவ்வழக்கு தொடர்பாகத் தமிழ் மலர் நாளிதழிலின் RAJESH MANIMAAREN இவ்வழக்கு தொடர்பானத் தகவல்களைத் திரட்டி நாளிதழில் செய்தியாக வெளியிட்டிருந்தார். அச்செய்தி பல்வேறு ஊடகங்களிலும் பரபரப்புச் செய்தியாக வெளியிடப்பட்டது.

 நீதிமன்றத்தில் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, இது தொடர்பானச் செய்திகளை வெளியிட்ட நிருபரான RAJESH மீது TAN SRI NADARAJAH அவதூறு வழக்கைத் தொடுத்த நிலையில் தமிழ் மலர் நாளிதழின் உரிமையாளர் S.M PERIASAMY மீதும் வழக்கு தொடுத்திருந்தார். சமூகப் பொறுப்புடைய நிருபர் எனும் அடிப்படையில் இவ்வழக்கு தொடர்பாக RAJESH எழுதிய கட்டுரை இவ்வழக்கு தொடர்பானதாக இருந்ததால், நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் அது தொடர்பாகப் பொது ஊடகங்களில் செய்திகளை வெளியிட அனுமதியில்லாத நிலையில் RAJESH அவ்வழக்கு தொடர்பாக எழுதிய கட்டுரைக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

இதன் தொடர்ச்சியாக TAN SRI NADARAJAH தொடுத்த வழக்கின் அடிப்படையில் 295,858.00 ரிங்கிட் அபராதம் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக 10,000.00 ரிங்கிட்டை வழங்குவதாகத் துணை அமைச்சர் SENATOR SARASWATHY தெரிவித்தார்இதன் தொடர்ச்சியாகப் பொதுமக்களும் சமூக நல்லுள்ளங்களும் அம்பேத்கர் இயக்கத்தின் மூலமாக ராஜேஷுக்கு நிதியுதவி அளிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

PERTUBUHAN KEBAJIKAN DR AMBEDKAR MALAYSIA
HONG LEONG BANK
1980 0052 558

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *