RM 321,000 மதிப்பிலானப் பசுக்களைக் கடத்திய ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 19 Mar, 2025
மார்ச் 19,
சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் பசு மாடுகளைக் கடத்த முயன்ற உள்ளூர் ஆடவர் ஒருவரை எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவு சிறப்பு படையினர் கைது செய்ததாக அதன் தென்கிழக்குப் பிரிவு இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab Hamid தெரிவித்தார். மலேசிய தாய்லாந்து எல்லை பகுதியில் உள்ள ஆற்றில் படகு வழியாக 34 பசு மாடுகள் கடத்தப்பட்ட நிலையில் படகில் இருந்த ஆடவர் மீண்டும் தாய்லாந்து எல்லைக்குள் தப்பி ஓடியதாகவும் மற்றோர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் Datuk Nik Ros Azhan Nik Ab Hamid தெரிவித்தார்.
அதிகாலை 4 மணியளவில் சம்மந்தப்பட்ட பகுதியிக்ல் எல்லை பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியை மேற்கொண்டபோது பதிவு செய்யப்படதாகப் படகைக் கண்டதாகவும் படகில் RM 321,000 மதிப்பிலானப் பசு மாடுகள் உள்ளூர் சந்தையில் விற்பதற்காகத் தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவு சிறப்பு படையின் தென்கிழக்குப் பிரிவு இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab Hamid தெரிவித்தார்.
Seorang lelaki tempatan ditahan kerana cuba menyeludup 34 ekor lembu bernilai RM321,000 dari Thailand ke Malaysia melalui sungai di sempadan. Seorang lagi suspek melarikan diri ke Thailand. Operasi dilakukan oleh pasukan khas antipenyeludupan sempadan awal pagi tadi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *