மரக்கட்டைகளைக் கடத்தும் கும்பல் கைது! RM 1.83 மில்லியன் மரக்கட்டைகள் பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 20 Mar, 2025
மார்ச் 20,
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து சட்டவிரோதமாக மரங்களை வெட்டி, மரக்கட்டைகளாக விற்பனை செய்து வந்த 68 வயது முதியவரையும் 3 தொழிலாளர்களையும் தென்கிழக்கு எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவினர் கைது செய்தனர். திரங்கானுவில் உள்ள BESUT காட்டுப்பகுதியில் மரங்களை வெட்டும் இயந்திரங்களுடன் தொழில்சாலையை அமைத்து சட்டவிரோதமாக மரங்களை விற்று வந்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்மந்தப்பட்ட தொழில்சாலையிலிருந்து 13,000 மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்துள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட மரக்கட்டைகளின் மதிப்பு RM 1.83 மில்லியன் என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 68 வயது முதியவர் தொழில்சாலையின் உரிமையாளர் என தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 தொழிலாளர்களும் 31 முதல் 41 வயது உள்ளூர் ஆடவர்கள் என தெரிய வந்துள்ளது.
Seorang lelaki berusia 68 tahun dan tiga pekerja ditahan kerana menebang serta menjual kayu secara haram di Besut. Sebanyak 13,000 kayu bernilai RM1.83 juta dirampas bersama mesin pemotong kayu yang digunakan dalam operasi haram tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *