குடியுரிமைக்காக லஞ்சம் கொடுத்த இருவர் கைது!

top-news

மார்ச் 18,

மலேசியக் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்த கும்பலுக்கு ஆதரவாகச் செயல்முறையை விரைவுப்படுத்த லஞ்சம் கொடுக்க முயன்ற நிறுவனத்தைச் சேர்ந்த இருவர் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட இருவரும் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்காகக் குடியுரிமையைப் பெற விண்ணப்பம் செய்திருந்த நிலையில் விண்ணப்பத்திற்கானச் செயல்முறைகளில் தளர்வுகளைக் கடைப்பிடிக்க அரசு அதிகாரிகளுக்குத் தலா RM5,000 முதல் RM150,000 வரை லஞ்சம் கொடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த மார்ச் 11 குடியுரிமை விண்ணப்பங்களைச் செயல்முறைப்படுத்தும் அதிகாரிகளில் மூவர் விசாரிக்கப்பட்ட நிலையில் அதன தொடர்ச்சியாக நிறுவனத்தின் தொடர்பாளர்களான 20 வயது 30 வயது ஆடவர் இருவரிடமும் நேற்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர்கள் இன்று லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

SPRM menahan dua pemilik syarikat dan seorang kerani kerana disyaki merasuah pegawai kerajaan bagi mempercepat permohonan taraf warganegara Malaysia. Mereka dipercayai membayar rasuah RM5,000 hingga RM150,000.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *