அரசியல் அரங்கில் மதத்தைப் பயன்படுத்துவதா?! - ஹாடிக்கு கண்டனம்

- Shan Siva
- 21 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 21 அரசியல் அரங்கில் மதத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக பாஸ் தலைவர் ஹாடி அவாங் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதால், பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் குறைக்கும் திட்டம் கடவுளின் விருப்பத்திற்கு முரணானது என்ற அவரது கூற்றை நிரூபிக்குமாறு அப்துல் ஹாடி அவாங்கிற்கு முன்னாள் அம்னோ எம்பி தவ்பிக் இஸ்மாயில் சவால் விடுத்துள்ளார்.
அவர் சொல்வதை ஆதரிக்கும் குர்ஆன் வசனத்தை ஹாடியால் மேற்கோள் காட்ட முடியுமா? என்று FMTயிடம் அவர் தெரிவித்துள்ளர்.
முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மானின் மகனுமான தவ்பிக், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் மதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று சுட்டிக்கஅட்டினார்.
பிரதமர் பதவிக்கான ஆண்டுகாலம் இரண்டு தவணை மட்டுமே என்கிற வரம்பை நடைமுறைப்படுத்துவது நல்ல நிர்வாகத்தின் முக்கிய அம்சமாகும் என்று குறிப்பிட்ட அவர், மேலும் திறமையான தலைமைத் தேர்வை ஊக்குவிக்கும் என்று கூறினார்.
இது ஜனநாயகத்தின் ஒரு பகுதி. வாக்களிக்கும் பொதுமக்கள் இது தலைவர்களுக்கு ஒரு நல்ல ஆட்சி அளவுகோலாக உணர்கிறார்கள் என்று அவர் விளக்கினார்.
கடந்த புதன்கிழமை, இந்த புதிய விதி குறித்த பேச்சுக்கு பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தலைமை என்பது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் புனிதமான நம்பிக்கை" என்று கூறினார்.
முஸ்லீம்கள் தங்களை முஸ்லிமல்லாதவர்களால் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கும் போது தீர்க்கதரிசிகள் நிறுவிய பாதையில் இருந்து விலகுவதற்கு சமம் என்று மாராங் எம்.பியுமான அவர் எச்சரித்தார்!
Bekas Ahli Parlimen UMNO, Tawfik Ismail, mencabar Hadi Awang membuktikan kenyataannya bahawa had penggal PM bertentangan dengan kehendak Tuhan. Beliau menegaskan agama tidak harus disalahgunakan dalam politik, sementara had penggal menggalakkan tadbir urus baik dan pemilihan pemimpin berkualiti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *