நான்காவது நாளாக MACC அலுவலகத்தில் இஸ்மாயில் சப்ரி!

- Shan Siva
- 17 Mar, 2025
புத்ராஜெயா, மார்ச் 17: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), புத்ராஜெயாவில் உள்ள அதன்
தலைமையகத்தில் நான்காவது நாளாக முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை
விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
பெரா நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில், காலை 9.52 மணிக்கு MACC தலைமையகத்திற்கு வந்தார்.
முன்னாள் பிரதமரான இஸ்மாயில் தனது முன்னாள் மூத்த அதிகாரிகள் நான்கு பேர்
மீதான விசாரணையில் சந்தேக நபராக அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 10 அன்று அவர் தனது சொத்துக்களை MACC-யிடம் அறிவித்தார், பிப்ரவரி 19 அன்று ஏஜென்சியால்
விசாரிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வியாழன் மற்றும்
வெள்ளிக்கிழமைகளில் MACC அதிகாரிகளும் அவரை தினமும் சுமார் ஆறு மணி நேரம் விசாரித்தனர்.
கடந்த பிப்ரவரி 22 அன்று வீட்டில் மயங்கி விழுந்த இஸ்மாயில், இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது!
Mantan Perdana Menteri Ismail Sabri Yaakob hadir ke ibu pejabat SPRM di Putrajaya untuk hari keempat siasatan terhadapnya berkaitan kes melibatkan empat bekas pegawai kanan beliau. Ismail, yang sebelum ini pernah dirawat di hospital akibat tekanan darah, disoal siasat selama enam jam sehari sejak minggu lalu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *