5வது நாளாகா MACC விசாரணையில் இஸ்மாயில் சப்ரி

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மார்ச் 19-   ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக  முன்னாள் பிரதமர்  இஸ்மாயில் சப்ரி யாக்கோப்  இன்று காலை புத்ரா ஜெயாவில் உள்ள மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்திற்கு வந்தார்.

ஐந்தாவது நாளாக  சாட்சியம் அளிப்பதற்காக இஸ்மாயில் இன்று காலை 9.57 மணியளவில் எம்.ஏ.சி.சி. அலுவலகம் வந்தடைந்தார்..

கடந்த 2021 ஆகஸ்டு முதல் 2022 நவம்பர் வரை பிரதமராகப் பதவி வகித்த போது அறிமுகப்படுத்திய ‘மலேசிய குடும்பம்‘ திட்டத்தை பிரபலப்படுத்தும் மற்றும் ஊக்குவிக்கும் நோக்கத்திற்காகப் பெறப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதி சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

பாதுகாப்பு இல்லம் ஒன்றிலிருந்து பல்வேறு நாடுகளின் நாணயங்களை உள்ளடக்கிய 17 கோடி வெள்ளி ரொக்கம் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊழல் மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையில் இஸ்மாயில் சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளார் என்று எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கடந்த மார்ச் 3ஆம் தேதி கூறியிருந்தார்.

அந்த சோதனை நடவடிக்கையில் சுமார் 70 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 16 கிலோ அசல் தங்க கட்டிகளும் கைப்பற்றப்பட்டது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக 20 லட்சம் வெள்ளியை உட்படுத்திய 13 வங்கிக் கணக்குகளையும் எம்.ஏ.சி.சி. முடக்கியது குறிபிடத்தக்கது!

Bekas Perdana Menteri, Ismail Sabri Yaakob hadir ke ibu pejabat SPRM Putrajaya bagi memberi keterangan berhubung siasatan kes rasuah dan pengubahan wang haram. Beliau disiasat berkaitan dana kempen "Keluarga Malaysia" serta wang tunai RM170 juta dan emas 16kg yang dirampas dalam operasi SPRM.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *