இஸ்மாயில் சப்ரியிடம் 5 மணிநேரம் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மார்ச் 25-

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் நேற்று ஏழாவது நாளாக மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை நடத்தியது.

புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திலிருந்து நேற்று பிற்பகல் 3.04மணிக்கு தொயோத்தா வெல்ஃபயர் வாகனம் மூலம் வெளியேறிக் கொண்டிருந்த இஸ்மாயில் தமது வாகனத்தின் கார்க் கண்ணாடியை இறக்கிவிட்டு அங்கிருந்த செய்தியாளர்களை நோக்கி ஹரிராயா வாழ்த்து தெரிவித்தார்.

இவ்வாரத்தில் மீண்டும் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என்பது தெரியவில்லை. அது குறித்து எம்ஏசிசி எதுவும் தெரிவிக்கவில்லை.இஸ்மாயில் நேற்று காலை 9.54மணிக்கு

எம்ஏசிசி தலைமையகம் வந்தடைந்தார். தம்முடைய முன்னாள் மூத்த அதிகாரிகள் நால்வர்மீது நடத்தப்பட்டுவரும் விசாரணையின் ஒரு பகுதியாக அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அந்த நால்வரின் வீடுகளிலும் இதர மூன்று வளாகங்களிலும் அண்மையில் எம்ஏசிசி அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் பதினேழு கோடி ரொக்கப் பணமும் பதினாறு கிலோ தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வழக்கில் இஸ்மாயில் ஒரு முக்கிய சந்தேக நபராக விளங்குகிறார்.

அவரிடம் முதல் தடவையாக பிப்ரவரி 19ஆம் தேதியன்று விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு, மார்ச் 13, 14, 17, 19, 20ஆகிய நாள்களிலும் அவர் விசாரிக்கப்பட்டார்.

Bekas Perdana Menteri Ismail Sabri disoal siasat oleh SPRM untuk hari ketujuh berhubung kes rasuah melibatkan pegawai kanannya. Siasatan berkaitan rampasan wang tunai RM17 juta dan 16 kg emas. Beliau sebelum ini telah dipanggil beberapa kali sejak Februari.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *