மலாய் மொழிக்குச் சீன இடைநிலைப்பள்ளிகள் எதிர்ப்பு! - டி.ஏ.பி கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

இடைநிலைப்பள்ளியில் கணிதம் அறிவியல் பாடங்களை மலாய் மொழியில் கற்பிக்க எதிராக பினாங்கில் உள்ள சீன இடைநிலைப்பள்ளிகள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் நிலையில் டி..பி தலைவர் Lim Guan Eng இதற்கும் டி.ஏ.பிக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

டி.ஏ.பி கட்சியைச் சேர்ந்த Datuk Seri Koay Hean Eng தலைமையில் பினாங்கில் உள்ள 11 சீன இடைநிலைப்பள்ளிகள் ஒரு சேர மலாய் மொழியில் கணிதமும் அறிவியலும் பயில்வதற்கு மாணவர்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்குவதாகத் தெரிவித்திருப்பது பலரையும் டி.ஏ.பியின் மீது கோபத்தைத் தெரிவித்து வருவது சரியில்லை என டி.ஏ.பி தலைவர் Lim Guan Eng விளக்கமளித்தார்.

தேசிய மொழியான மலாய் மொழியில் கல்விக் கற்பது மலாய் மொழி புலமையை மேம்படுத்தும் என்றும், குறிப்பிட்ட இடைநிலைப்பள்ளியின் வாரியத் தலைவராக Datuk Seri Koay Hean Eng கருத்தை வெளியிட்டுள்ளார் என்றும், அவரின் கருத்தை டி.ஏ.பி ஆதரிக்கவில்லை என டி.ஏ.பி தலைவர் Lim Guan Eng விளக்கமளித்தார்.

தனிநபர் கருத்துடன் கட்சியைச் சம்மந்தப்படுத்த வேண்டாம் என டி.ஏ.பி தலைவர் Lim Guan Eng கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *