ஆலயப் பிரச்னைக்கு சுமூகமான தீர்வு! இரு தரப்பு ஒத்துழைப்புடன் புதிய இடம்! அதிகாரப்பூர்வக் கடிதம் வழங்கினார் அமைச்சர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 25: தலைநகர்  ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலுக்கு இன்று சுமூகமான தீர்வு கிடைத்துள்ளது.

இரு தரப்பும் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவ்வாலயத்திற்கு  4 ஆயிரம் சதுர அடியில் புதிய இடத்தை அடையாளம் கண்டுள்ளதோடு,  அதற்கான அதிகாரப்பூர்வக் கடிதத்தையும் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்தபா ஆலயத் தலைவர் பார்த்திபனிடம் வழங்கினார்.

கோயில் 50 மீட்டர் தூரத்திற்கு மாற்றப்படும் என்று ஜலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் குழு கோயிலை 4,000 சதுர அடி பரப்பளவில் புதிய இடத்திற்கு மாற்ற ஒப்புக்கொண்டதாக ஜலிஹா கூறினார் - இது கோயிலின் தற்போதைய அளவிற்கு இணையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இடமாற்ற செயல்முறை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் வரை கோயில் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் இன மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் சர்ச்சையானக் கருத்துகளைப் பகிர வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

இன்று நடைபெற்ற இந்த சிறப்பு சந்திப்பில் ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் ஆலயத் தலைவர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதனிடையே கோயிலுக்குப் புதிதாக வழங்கப்பட்டுள்ள இடம் மக்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும் என்றும், முன்பு இருந்த இடத்தை விட இது வசதியாக இருக்கும் என்றும் ஆலயத் தலைவர் பார்த்திபன் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *