போதைப்பொருள் பயன்படுத்திய 144 பேர் கைது!

- Sangeetha K Loganathan
- 30 Mar, 2025
மார்ச் 30,
மலாக்கா மாநிலப் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினர் (Jabatan Siasatan Jenayah Narkotik JSJN MELAKA) மேற்கொண்ட சோதனையில் 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் DATUK DZULKHAIRI MUKTHAR தெரிவித்தார்.
கடந்த 3 நாள்களாக மலாக்கா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 244 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும் 144 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதால் கைது செய்யப்பட்டருப்பதாக மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் DATUK DZULKHAIRI MUKTHAR தெரிவித்தார்.
கடந்த 3 நாள்களில் 142 பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின் மூலமாக RM 3,145 ரிங்கிட் மதிப்பிலானப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Sebanyak 144 individu ditahan dalam operasi JSJN Melaka terhadap penyalahgunaan dadah. Daripada 244 orang yang diperiksa dalam tempoh tiga hari, 144 didapati positif dadah. Pihak berkuasa turut merampas dadah bernilai RM3,145 dalam 142 serbuan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *