பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மரத்தை வெட்டிய மூவர் கைது!

- Sangeetha K Loganathan
- 25 Mar, 2025
மார்ச் 25,
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள மரங்களைச் சட்டவிரோதமாக வெட்டி, வெளிநாட்டுக்குக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த மூவரைக் கைது செய்துள்ளதாகச் சிறப்புப் பாதுகாப்புக் கடத்தல் பிரிவின் இயக்குநர் Datuk Nik Ros Azhan Ab Rahman தெரிவித்தார். சம்மந்தப்பட்ட கும்பல் கோத்தா பாருவில் உள்ள காட்டுப்பகுதியில் மரங்களை வெட்டுவதாகத் தகவல் கிடைத்த நிலையில் கோத்தா பாருவில் உள்ள Sungai Sam, Paloh காட்டுப் பகுதியில் மாலை 4 மணிக்குச் சோதனையை நடத்தியதாக Datuk Nik Ros Azhan Ab Rahman தெரிவித்தார்.
கடத்தல் மரங்களைக் குவிக்கும் பகுதியில் 28 முதல் 52 வயதுள்ள மூவர் கைது செய்யப்பட்டதாகவும் சம்மந்தப்பட்ட இடத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்ததாகவும் Datuk Nik Ros Azhan Ab Rahman தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட மரக்கட்டைகளின் மதிப்பு 10 லட்சத்திற்கும் மேலானவை என கணக்கிடப்பட்டிருப்பதாக Datuk Nik Ros Azhan Ab Rahman தெரிவித்தார்.
Tiga lelaki ditahan kerana menebang pokok secara haram di kawasan hutan simpan Sungai Sam, Paloh, Kota Bharu. Pihak berkuasa merampas lebih 500 batang kayu bernilai melebihi RM1 juta.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *