2025 ஆம் ஆண்டு வரை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்தில்! - நாசா அறிவிப்பு!
- Muthu Kumar
- 09 Aug, 2024
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்திலேயே இருக்க வேண்டியிருக்கும் என நாசா அறிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருடன் இணைந்து கடந்த ஜூன் 5ம் தேதி விண்வெளிக்கு சென்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு இருவரும் கடந்த மாதம் (ஜூலை) 13ம் தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயணத் திட்டம் வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருவரும் அப்போது பூமிக்கு திரும்பும் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனால் அவற்றை சரிசெய்ய முடியவில்லை. இதனால் தற்போதும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் 2025 பிப்ரவரி மாதம் வரை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்திலேயே இருக்க வேண்டியிருக்கும் என நாசா அறிவித்துள்ளது. விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு, டெஃப்லான் சீல் பாதிப்பு உள்ளிட்டவற்றை சரிசெய்ய வேண்டியுள்ளது.
தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்த பிறகே சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப முடியும் என நாசா விளக்கம் அளித்துள்ளது. போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்வெளி ஓடத்துக்கு பதில் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் ஒடம் மூலம் பூமிக்கு திரும்புவார் என்றும் கூறியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *