கீழ்ப்பேரா மாவட்டத்தில் காந்தியடிகளின் பிறந்த நாள் நினைவாக ஓட்டப் போட்டி!
- Muthu Kumar
- 02 Oct, 2024
தெலுக் இந்தான், அக்.2-
கீழ்ப்பேரா மாவட்டத்தில் அரசியல் கலப்பு இல்லாமல் இந்திய சமூகத்திற்கு இருக்கும் ஒரே ஓர் அசையாச் சொத்து காந்தி நினைவு மண்டபம் மட்டுமே என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
ஒவ்வோர் ஆண்டும் காந்தியடிகளின் பிறந்த நாளைக் கொண்டாடி வரும் நிலையில், தேசியப்பள்ளி, தமிழ்ப்பள்ளி மற்றும் சீனப்பள்ளி மாணவர்களுக்கு 'மெர்டேக்கா ஓட்டப்பந்தயம்' என்னும் நிகழ்ச்சி 3 ஆவது ஆண்டாக நேற்று 29.9.2024 காலை 7.30 மணிக்கு மண்டபத்திலிருந்து தொடங்கப்பட்டது.
நகர மக்களையும், பெற்றோர்களையும் கவர்ந்த இந்த நிகழ்ச்சியினை மாவட்டக் கவல்துறையைச் சேர்ந்த ஏஎஸ்பி பிராப்திப் கண்ணையா அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்துள்ளார் என்றும் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துள்ள முன்னாள் ஆசிரியர் மு.இராஜகோபால் கூறினார்.மேலும் மகாத்மா காந்தியடிகளின் நினைவாக தெலுக் இந்தான் நகர் ஜாலான் மக்கோத்தாவில் இரண்டு கடைகள் கட்டக்கூடிய கட்டுமான நிலத்தில், கீழ்ப்பேரா மாவட்ட இந்தியர் சங்கத்தின் சார்பில் இரண்டு மாடிக்கட்டடம் கடந்த 1921 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இச்சங்கத்தில் இனம், மதம், மொழி என்னும் வேறுபாடின்றி இந்திய சமூகம் என்ற ஒற்றைச் சொல்லில் அன்றைய நம் சான்றோர்கள் ஒன்றிணைந்து வழங்கிய ஒத்துழைப்பின் வழி கட்டப்பட்ட இந்த கட்டடம் அவர்களின் தியாகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அப்துல் காதர் என்பவரே இந்திய சங்கத்தின் மூத்த தலைவராக இருந்துள்ளார் எனக் குறிப்பிட்டனர்.மேலும் கீழ்ப்பேரா மாவட்டத்தில் அரசியல் கலப்பு இல்லாமல் இந்திய சமூகத்திற்கு இருக்கும் ஒரே ஓர் அசையாச் சொத்து காந்தி நினைவு மண்டபம் மட்டுமே என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
அன்றைய நிகழ்வில் காந்தியடிகளின் நினைவாக நடைபெற்ற ஓட்டப் பந்தயப் போட்டியில் மூன்று சமூகத்தைச் சேர்ந்த 370 மாணவர்கள் பங்கு பெற்றிருந்தனர். இந்நாள், முன்னாள் ஆசிரியர்கள் அனைவரும் நடைபந்தயத்தில் கலந்து கொண்டனர். போட்டியில் வென்றவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது என்றார்.
கீழ்ப்பேராக் மாவட்ட ஓட்டப்பந்தய சங்கம், பணி ஓய்வு பெற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர் கழகம் மற்றும் மாவட்ட இந்தியர் சங்கம் (காந்தி நினைவு மண்டபம்) ஆகிய இந்த மூன்று அமைப்புகள் வழங்கிய நிதியின் மூலம் இந்த ஆண்டு நிகழ்ச்சி சிறப்புடன் நடத்தப்பட்டது. நகர சாலைகளில் நடைபெற்ற 'மெர்டேக்கா தினஓட்டப்பந்தயம்-3' "நிகழ்வில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சாலை பாதுகாப்பு வழங்கிய காவல் துறை தலைவர் ஏசிபி முகமது அட்னான் மற்றும் போக்குவரத்து போலீசாருக்கும் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கிய தெலுக் இந்தான் ஊராட்சி மன்ற தலைவருக்கும் பேராதரவு கொடுத்த பெற்றோர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் இராஜகோபால் நன்றி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *