சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளைக் கைவிட்டு விடுவீர்களா? – DR RAMASAMY கேள்வி!

top-news
FREE WEBSITE AD

சிலாங்கூரில் தமிழ்ப்பள்ளிகள் காக்கப்படும் என ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்கள் சூளுரைத்தாலும் LADANG KINRARA தமிழ்ப்பள்ளியின் கட்டிட்டங்களை வேறு இடத்தில் மாற்றியமைக்கும்படி Subang Jaya நகராண்மைக்கழகம் அறிவுருத்தியுள்ள நிலையில் இதை இந்தியத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் கண்டும் காணாது இருப்பதாக உரிமை கட்சியின் தலைவரான DR RAMASAMY தெரிவித்துள்ளார்,

மலேசியாவின் பழமையானப் பள்ளிகளில் ஒன்றான sjk t Ladang Kinrara தமிழ்ப்பள்ளியின் கட்டிடத்தை இடிக்கும் அளவிற்கானத் துணிச்சலை அரசாங்கம் கொண்டிருக்கிறது எனில் அதற்கு இவர்களைப் போன்ற காது கேளாத அரசியல் தலைவர்கள் தான் காரணம் என உரிமை கட்சியின் தலைவரான DR RAMASAMY கடுமையாகச் சாடினார். சுமார் 72 ஆண்டுகள் பழமையான ஒரு தமிழ்ப்பள்ளியை இடித்து தான் அவ்விடத்தில் சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ள வேண்டுமா? அவர்களின் மௌனம் தமிழ்ப்பள்ளியை இடிக்கட்டும் என்பதற்குச் சம்மதா? இந்த சாலை விரிவாக்கத்தால் சம்மந்தப்பட்ட குடியிருப்புவாசிகளுக்குப் பயனா? அல்லது குடியிருப்புப் பகுதியைக் கட்டமைக்கும் தனியார் நிறுவனத்திற்குப் பயனா? என DR RAMASAMY சிலாங்கூர் இந்தியச் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி முன்வைத்துள்ளார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Tester

hzpbxa