DIESEL விலை உயர்வு சாமானியர்களைப் பாதிக்கும்! - பகாங் உரிமை கட்சி!
- Thina S
- 10 Jun, 2024
மக்களின்
அன்றாட வாழ்க்கையில் நீரும், மின்சாரமும் எப்படி தேவையோ அதே
போன்று எரிவாயு, முக்கியமாக டீசல் எரிபொருள் மிகவும்
அத்தியாவசியமாகிவிட்ட நிலையில் DIESEL மானியத்தை ரத்து செய்து சாமானிய
மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளதாக பகாங் மாநில
உரிமை கட்சியின் தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுவரையில்
வரலாற்றில் இல்லாத நிலையில் DIESEL விலை உயர்த்தப்பட்டிருப்பது, பெருமளவில் சிறு குறு
வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக அவர் வலியுறுத்தினார். இது வணிகர்களுக்கு
மட்டுமல்லாது பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் சாமானியர்களுக்கும் இது பெரும்
சிக்கைலை ஏற்படுத்தும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். DIESEL எரிப்பொருள் விலை உயர்வின்
தாக்கத்தைக் இனி பொது மக்களும் வணிக நிறுவனங்களும் கண்டிப்பாக எதிர்க்கொள்ள
வேண்டிய கட்டாயச் சூல்நிலைக்குத் தள்ளப்படுவது தவிர்க்க இயலாது.
சமுதாயத்தில் ஏற்படும் தொடர் விளைவுகளை எண்ணிப் பார்த்து டீசல் எரிப்பொருள் விலைக் கட்டுப்பாட்டை அரசாங்கம் மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், சமுதாய நலன் கருதி நிர்ணயிக்கப்படும் விலைகளில் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்றும்; தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வினை மீண்டும் திரும்பப் பெற வேண்டுமென்றும் கணேசன் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *