புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சாதனங்களை மாற்றிக்கொள்ள நடவடிக்கை! - இலக்கவியல் அமைச்சு

- Shan Siva
- 04 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல் 4: புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயாவில் சமீபத்தில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சேதமடைந்த டிஜிட்டல் சாதனங்களை மாற்றுவதற்கான
கோரிக்கைகளை இலக்கவியல் அமைச்சு மதிப்பாய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்ரா ஹைட்ஸில்
உள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் கோபிந்த் சிங் தியோவிடம், தீ விபத்தில்
மடிக்கணினிகள், இணைய உபகரணங்கள்
மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட பல டிஜிட்டல் சாதனங்கள் சேதமடைந்ததாக
பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர்களின்
கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்து அமைச்சரவையுடன் விவாதிப்போம் என்று அவர் கூறினார்.
தீயினால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் சாதனங்களை மாற்றிக்கொள்ள ண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்!
Kementerian Komunikasi akan menilai permintaan mangsa kebakaran paip gas di Putra Heights untuk menggantikan peranti digital rosak seperti komputer riba, telefon dan peralatan internet. Menteri Gobind Singh Deo berkata permintaan itu akan dibincangkan bersama kabinet dalam beberapa hari lagi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *