பூர்வக்குடிப் பெண்ணை இனரீதியாக அவமானப்படுத்திய ஆடவர் மீது நடவடிக்கை! ஒற்றுமை அமைச்சு!

- Sangeetha K Loganathan
- 26 Mar, 2025
மார்ச் 26,
ஷா அலாமில் உள்ள அங்காடிக் கடையில் வேலை செய்து வரும் DAYAK இன இளம்பெண்ணை அருவருப்பான வார்த்தைகளாலும் இன ரீதியாக அவமானப்படுத்தும் வகையில் வாடிக்கையாளர் ஒருவர் திட்டும்படியானக் காணொலி சமூக வலைத்தலத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒற்றுமை துறை அமைச்சர் Datuk Aaron Ago Dagang வலியுறுத்தினார். எந்தவொரு நபரையும் இனரீதியாக அவமானப்படுத்துவது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என Datuk Aaron Ago Dagang தெரிவித்தார்.
விற்பனையாளரின் மீதானக் கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்த வாடிக்கையாளர் பூர்வக் குடியினத்துப் பெண்ணின் இனமான DAYAK இனத்தைக் குறிக்கும் இழிவானச் சொல்களைப் பயன்படுத்தி திட்டியதாக நம்பப்படுகிறது. இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட ஆடவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எந்தவொரு நபரின் இனத்தையும் சமூகத்தை இழிவாக வகைப்படுத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டும் என Datuk Aaron Ago Dagang தெரிவித்தார்.
Seorang pelanggan di sebuah kedai di Shah Alam didakwa menghina seorang pekerja wanita Dayak dengan kata-kata berunsur perkauman. Menteri Perpaduan Datuk Aaron Ago Dagang, menggesa tindakan undang-undang diambil terhadap individu terbabit bagi mengekang penghinaan perkauman.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *