எதிர்திசையில் வாகனத்தைச் செலுத்திய பெண் கைது!

top-news

மார்ச் 28,

சாலையில் எதிர்திசையில் வாகனம் செல்லும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட வாகனமோட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக Timur Laut மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak தெரிவித்தார். இச்சம்பவம் கடந்த 23 மார்ச் இரவு 10.50 மணிக்குப் பினாங்கு Jalan Masjid Negeri சாலையில் நிகழ்ந்ததாகவும் சம்மந்தப்பட்ட மைவி கார் ஓட்டுநரான 32 வயது பெண் காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாகவும்Timur Laut மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak தெரிவித்தார்.

சாலையின் அறிவிப்பு பலகையைக் கவனிக்காமல் வாகனத்தைச் சாலையின் எதிர்திசையில் செலுத்தியதாகச் சம்மந்தப்பட்ட 32 வயது பெண் வாகனமோட்டி வாக்குமூலம் அளித்த நிலையில் அவர் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சாலையின் அறிவிப்புப் பலகைகளை முறையாகப் பின்பற்றும்படியும் எதிர்திசையில் வாகனங்களைச் செலுத்துவதைத் தவிர்க்கும்படியும் Timur Laut மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak கேட்டுக் கொண்டார்.

Seorang wanita berusia 32 tahun ditahan selepas memandu secara melawan arus di Jalan Masjid Negeri, Pulau Pinang, pada 23 Mac. Kejadian itu tular di media sosial dan pihak polis Timur Laut telah mengambil keterangannya untuk siasatan lanjut. Polis menasihatkan pengguna jalan raya agar mematuhi papan tanda lalu lintas bagi mengelakkan kejadian serupa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *