சாலையைக் கடக்கும் போது வாகனம் மோதி முதியவர் பலி!

- Sangeetha K Loganathan
- 04 Apr, 2025
ஏப்ரல் 4,
ஜொகூரிலிருந்து ஆயேர் ஈத்தாம் நோக்கி செல்லும் சாலையில் முதியவர் ஒருவர் சாலையைக் கடக்கும் போது எதிரில் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 72 வயதான அம்முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக வடக்கு ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Balveer Singh Mahindar Singh தெரிவித்தார்.
விபத்துக் குறித்து அதிகாலை 6.24 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதும் மீட்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் விபத்தில் உயிரிழந்த 72 வயது முதியவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் Balveer Singh Mahindar Singh தெரிவித்தார். சம்மந்தப்பட்ட முதியவர் திடீரென சாலையின் நடுவில் தோன்றியதால் கட்டுப்பாட்டை இழந்ததாக முதியவரை மோதிய Proton Iriz வாகனமோட்டியான 25 வயது இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Seorang lelaki warga emas berusia 72 tahun maut di tempat kejadian selepas dirempuh kereta ketika melintas jalan dari Johor ke Ayer Hitam. Pemandu wanita mendakwa mangsa muncul tiba-tiba di tengah jalan, menyebabkan kemalangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *