மியன்மார் நிலநடுக்கப் பேரிடர்- மலேசியா வெ.1 கோடி உதவிநிதி!

- Muthu Kumar
- 31 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 31-
பயங்கர நிலநடுக்கத்தால் பரவலான அழிவை எதிர்நோக்கியிருக்கும் மியன்மாருக்கு மலேசியா மொத்தம் ஒருகோடி வெள்ளி மதிப்புள்ள மனிதநேய உதவிகளை வழங்கும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்வதன்
மூலம் வட்டார ஒற்றுமை மீது மலேசியா கடப்பாடு கொண்டுள்ளது என்பதை அது காட்டுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார்.
ஆசியான் அமைப்பின் தலைவர் எனும் முறையில், வட்டாரத்தின் கூட்டுக் குரலுக்கு மதிப்பளிக்கும் வகையில் மனிதநேய உதவிகளை வழங்குவதில் மலேசியா துடிப்புடனும் அர்த்தப்பூர்வமாகவும் பங்காற்ற விரும்புகிறது என்றார் அவர்.
மியன்மாரில் தற்போது நடைபெற்றுவரும் மீட்புப்பணி முயற்சிகளுக்கு மலேசியா ஆதரவளிக்கும் என்பதை மறுவறுதிப்படுத்தும் நோக்கத்தில் அந்நாட்டுக்கு அடுத்த வாரம் மனிதநேயக் குழுவுக்குத் தலைமையேற்று செல்லும்படி வெளியுறவு அமைச்சரைப் பணித்துள்ளேன் என்று நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற பேரிடைைரச் சமாளிக்க ஒரு நாட்டினால் மட்டும் இயலாது. ஆசியான் நாடுகளின் ஒருங்கிணைந்த முன்னெடுப்பும் அவசியமாகும். வட்டார நெருக்கடிகளைத் தீர்க்க வட்டார நாடுகள்தான் முன்வர வேண்டும்.தன்னுடைய மக்களின் நலனைப் பாதுகாக்க விரைவான, ஒருங்கிணைந்த, நோக்கம் சார்ந்த அணுகுமுறைகளைப் கடைப்பிடிக்க வேண்டியது ஆசியானின் கடமையாகும் என்றார் அவர்.
நேற்று காலையில் சிறப்பு மலேசிய பேரிடர் உதவி மற்றும் மீட்புப்படையை (ஸ்மார்ட் சேர்ந்த ஐம்பது வீரர்கள், மனித நேயப் பணிகளை மேற்கொள்வதற்காக மியன்மாரின் நேபிடாவ் நகருக்குப் புறப்பட்டனர்.அரச மலேசிய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு ஏர்பஸ் ரக விமானங்கள்மூலம் ஐந்து டன் எடைகொண்ட இரண்டு லோரிகள் உட்பட பல தளவாடங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டன.
வெள்ளிக்கிழமை பிற்பகலில் மியன்மாரின் மத்திய பகுதியை 7.7ஆற்றல் கொண்ட பலத்த நிலநடுக்கம் உலுக்கியது. அதில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் வரை பலியாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Malaysia menyumbang bantuan kemanusiaan bernilai RM10 juta kepada Myanmar yang dilanda gempa bumi dahsyat. Perdana Menteri Anwar Ibrahim menegaskan komitmen Malaysia dalam membantu mangsa dan mengarahkan Menteri Luar mengetuai misi bantuan. Pasukan SMART bersama peralatan bantuan telah berlepas ke Naypyidaw.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *