Datuk Seri Dr Zaliha Mustaf கோயிலைக் காப்பதில் உறுதியாக இருந்தார்! – JAKEL நிறுவனம் விளக்கம்!

- Sangeetha K Loganathan
- 28 Mar, 2025
மார்ச் 28,
தலைநகர் JALAN MASJID INDIA சாலையில் அமைந்துள்ள Dewi Sri Pathrakaliamman அலய விவகாரத்தில் கோயில் பக்கம் இருக்கும் நியாயங்களையும் உணர்வுகளையும் முழுமையாகப் புரிந்துக் கொண்ட நபராகக் கூட்டரசு வளாக அமைச்சர் Datuk Seri Dr Zaliha Mustafa செயல்பட்டதாக Jakel Trading Sdn Bhd நிறுவனத்தின் நிறுவனர் Datuk Seri Mohamed Faroz Mohamed Jakel தெரிவித்துள்ளார். நிலத்தின் உரிமையாளர் எனும் வகையில் அந்த நிலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள எல்லா உரிமைகளும் எங்களுக்கு இருந்தாலும் கோயில் என்பது புனிதமானத் தலம் என்றும் அந்த புனிதத்தை நாம் மதிக்க வேண்டுமென்பதில் Datuk Seri Dr Zaliha Mustafa உறுதியாக இருந்ததாக Jakel Trading Sdn Bhd நிறுவனத்தின் நிறுவனர் Datuk Seri Mohamed Faroz Mohamed Jakel தெரிவித்தார்.
சில பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் நீதிமன்ற வழக்கை எதிர்கொள்வதாக நாங்கள் முடிவெடுத்த நிலையில் எங்களை நிறுத்தியது அவர் தான் என்றும், நீதிமன்றத்தின் மூலமாகத் தீர்வு கிடைக்கும் என நினைத்தால் அதை ஏன் இவ்வளவு காலமாகச் செய்யவில்லை என்றும் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தால் தீர்க்கப்படும் என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக இது தீர்க்கப்படவில்லை எனும் கேள்வியை Datuk Seri Dr Zaliha Mustafa எங்களிடம் முன்வைத்ததுடன், இஸ்லாத்தின் புனிதத்தை உணர்ந்த எவரும் பிற மதங்களிடையே நல்லுறவை வளர்ப்பார்களே தவிர பிரச்சனைகளை உருவாக்கமாட்டார்கள் என Datuk Seri Dr Zaliha Mustafa எங்களிடம் தெரிவித்தார்.
சட்டம் சொல்வதை மதிக்க வேண்டும் எனும் நிலையை எல்லோரும் உணர்ந்தது என்றாலும் இறை நம்பிக்கை என்பது உணர்வின் அடிப்படையிலானது என்பதை Datuk Seri Dr Zaliha Mustafa எங்களுக்கு உணர்த்தினார். அதன்பின்னர் நடந்த அனைத்துக்கட்ட பேச்சு வார்த்தைகளிலும் Jakel Trading நிறுவனக் குழுமம் கோயிலின் நிர்வாகத்துடன் ஒத்துழைப்பையும் வழங்கினோம். எங்களுடைய ஒத்துழைப்பிற்குப் பின்னர் கோயில் நிர்வாகத்தினர்களும் எங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்கினர். இறுதி வரையில் நடந்த பேச்சு வார்த்தைகள் வரையிலும் Datuk Seri Dr Zaliha Mustafa அவர்கள் Dewi Sri Pathrakaliamman கோயிலைக் காக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் என Jakel Trading நிறுவனக் குழுமத்தின் தலைவர் Datuk Seri Mohamed Faroz Mohamed Jakel தெரிவித்தார்.
Datuk Seri Dr Zaliha Mustafa bertegas dalam usaha mengekalkan kuil Dewi Sri Pathrakaliamman walaupun Jakel memiliki hak terhadap tanah tersebut. Jakel menghormati pendirian beliau dan akhirnya mencapai kesepakatan dengan pihak pengurusan kuil melalui rundingan damai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *