4 மோனோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது!
- Shan Siva
- 08 May, 2024
நேற்று தலைநகரில் பெய்த கன மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழந்ததோடு இருவர் காயமுற்றனர். 17 வாகனங்கள் சேதமுற்றன. இந்நிலையில் மோனோ ரயில் தடத்திலும் மரம் சரிந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், புக்கிட் நானாஸ், ராஜா சூலான், புக்கிட் பிந்தாங் மற்றும் இம்பி ஆகிய நான்கு மோனோ ரயில் நிலையங்கள் சுத்தம் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி முதல் பயணிகள் அந்தந்த இடங்களுக்கு தங்கள் பயணத்தைத் தொடர மாற்று சேவை வழங்கப்படும் ரேப்பிட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் இலவசமாக சேவையில் இருக்கும் Rapid Bus Sdn Bhd (Rapid Bus) ஷட்டில் மூலம் தங்கள் பயணத்தைத் தொடரலாம் என்றும், பயணிகள் பாதிக்கப்பட்ட நிலையத்திலிருந்து பயணிக்கலாம் என்றும் ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் இடங்களை அடைய மாற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு ரேபிட் ரெயில் வலியுறுத்தியுள்ளது. மேலும் தங்களின் மன்னிப்பையும் அது தெரிவித்துள்ளது.
தற்போது டிபிகேஎல் உதவியுடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *