சோதனையில் 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்! 46 சம்மன்கள்!

- Sangeetha K Loganathan
- 31 Mar, 2025
மார்ச் 30,
இரவு நேரத்தில் அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள்களின் அணிவகுப்பால் குடியிருப்புவாசிகளுக்குத் தொல்லைகள் ஏற்படுவதாகப் பெறப்பட்ட புகாரிந் அடிப்படையில் காவல்துறையினர் 10 மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்துள்ளதாக Terengganu மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Khairi Khairudin தெரிவித்தார். கோலா திரங்கானு குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 80 மோட்டார் சைக்கிள்களைச் சோதனையிட்டதாகவும் 46 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் 10 Yamaha RXZ வகை மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகச் சத்தத்தை எழுப்பும்படி மோட்டார் சைக்கிளின் பாகங்களை மாற்றியமைத்த 10 மோட்டார் சைக்கிள்கள் ஆய்வுக்காகப் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், நள்ளிரவுகளில் கும்பலாக மோட்டார் சைக்கிள்களில் சாலையோரத்திலும் பொது இடங்களில் குழுமியிருக்க வேண்டாம என Terengganu மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Khairi Khairudin எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
Polis menyita 10 motosikal Yamaha RXZ dalam Op Khas Samseng Jalanan di Kuala Terengganu susulan aduan bunyi ekzos ubah suai. Sebanyak 80 motosikal diperiksa dan 46 saman dikeluarkan atas pelbagai kesalahan kerana mengganggu ketenteraman awam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *