25 ஆண்டுப் போராட்டத்திற்கு வெற்றி! புதிய வீட்டில் சந்திப்போம் - அமைச்சர் Nga kor ming
- Thina S
- 06 May, 2024
25 ஆண்டுப் போராட்டத்திற்கு வெற்றி! புதிய வீட்டில் சந்திப்போம் - அமைச்சர் Nga kor ming
25 ஆண்டுகளுக்கும் மேலாக உலு சிலாங்கூர் பகுதியில் வாழ்ந்த தோட்டப் பாட்டாளிகள் தங்களுக்கான நில உரிமையைப் பெற போராடிய நிலையில் உள்ளாட்சி வீடமைப்பு அமைச்சர் Nga Kor Ming தலைமையில் இன்று அத்தோட்டப் பாட்டாளிகளுக்கு 245 புதிய வீடுகள் வழங்கப்படும் திட்டத்தை அறிவித்தார்.
உலுசிலாங்கூரில் உள்ள மேரி, நைகல் கார்னடர், புக்கிட் தாகார், சுங்கை திங்கி, மின்ஞாக் ஆகிய 5 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கான நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும், தனியார் நிறுவனங்கள் தங்களுக்கான நிலத்தை மீண்டும் வழங்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகள் தொடர்ந்து போராடினர். ஒற்றுமை அமைச்சு தனியார் நிறுவனத்திடன் சுமூகமாகப் பேசி தோட்டப் பாட்டாளிகளுக்கான வீடுகள் கட்டுவதற்கான நிலத்தை வழங்க ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் Berjaya Corp எனும் அத்தனியார் நிறுவனம் 20 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளது.
பெறப்பட்ட 20 ஏக்கர் நிலத்தில் 75மில்லியன் செலவில் 245 தரை வீடுகள் அரசு கட்டிக் கொடுக்கும் என Nga Kor Ming இன்று தெரிவித்தார். ஒற்றுமை அரசு இத்திட்டத்திற்கு 40 மில்லியன் ரிங்கிட்டும் சிலாங்கூர் மாநில அரசு 35 மில்லியன் ரிங்கிட்டும் வழங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Papparaidu, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Gunaraj, உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் Sathia prakash, நகராண்மைக் கழக உறுப்பினர் Thilageswary ஆகியோர் பலர் கலந்துக் கொண்டனர்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *