KKB தேர்தலில் PH வெற்றி பெற்றால் தேர்தல் மனு தாக்கல் செய்வோம்! - பெரிக்காத்தான்
- Shan Siva
- 07 May, 2024
கோலா குபு பஹாரு இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால், தேர்தல் குற்றங்களுக்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறி, தேர்தல் மனுவைத் தாக்கல் செய்வோம் என்று பெரிக்காத்தான் நேஷனல் தெரிவித்துள்ளது.
இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னும் பின்னும் பக்காத்தான் ஹராப்பான் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், அரசாங்க இயந்திரங்களை தவறாக பயன்படுத்தியதாகவும் பாஸ் கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தகியுதீன் ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
பக்காத்தான் வெற்றி பெற்றால் தேர்தல் மனு தாக்கல் செய்வோம் என்றும், கோலா திரெங்கானு, கெமாமான் போன்ற வழக்குகள் தங்களிடம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று பெரிகாத்தான் வேட்பாளர் கைருல் அஸ்ஹரி சவுத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு, தங்களிடம் வீடியோ ஆதாரம் மற்றும் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் உள்ளன என்று கோட்டா பாரு எம்.பியுமான அவர் கூறினார்.
உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சிலுக்கு (எம்பிஎச்எஸ்) ரிங்கிட் 5.21 மில்லியன் ஒதுக்கீடு செய்வதாக வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவித்ததை அடுத்து சர்ச்சை ஏற்பட்டது.
எவ்வாறாயினும், இது தேர்தல் குற்றச் சட்டம் 1954ஐ மீறவில்லை. ஏனெனில் வேட்புமனுத் தாக்கல் நாளுக்கு முன்பே ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது, பிரச்சார காலத்தில் அல்ல என்று Nga வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *