17 வயதுக்குட்பட்ட 2025 சிவன் சவால் கிண்ண கால்பந்து;பாகான் ரேஞ்சர்ஸ் வாகை சூடியது!

top-news
FREE WEBSITE AD

(தி.ஆர்.மேத்தியூஸ்)

பினாங்கு, மார்ச் 24-

பினாங்கு இந்தியர் கால்பந்து சங்கத்தின் 17வயதுக்கு கீழ்ப்பட்ட 2025 - சிவன் சவால் கிண்ண கால்பந்துப் போட்டியில் பாகான் ரேஞ்சர்ஸ் அணி வெற்றி வாகை சூடிய வேளையில், பட்டர்வொர்த் ரேஞ்சர்ஸ் அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

மூன்றாம் நிலையில் எல்பிகே அணியும், நான்காம் நிலையில் கருடா எப்சி அணியும் வென்றன. அரையிறுதி ஆட்டத்தில் பாகான் ரேஞ்சர்ஸ் அணி, எதிர்த்து விளையாடிய எல்பிகே அணியை தோற்கடித்து இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.

மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் பட்டர்வொர்த் ரேஞ்சர்ஸ் அணி,கருடா எப்சியை வென்று இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது. போட்டியின் சிறந்த விளையாட்டாளராக பட்டர்வொர்த் ரேஞ்சர்ஸ்
அணியின் பிரவின் ராஜ், சிறந்த இளம் விளையாட்டாளராக பாகான் ரேஞ்சர்ஸ் அணியின் தேசன், சிறந்த கோல் காவலராக மூவேந்திரன் மற்றும் 3 கோல்களை அடித்து சிம்சன் அதிக கோல் மன்னனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இப்போட்டியை டத்தோ கிராமட் காவல் நிலையத்தின் தலைவர் இன்ஸ்பெக்டர் அழகேசன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த வேளையில், சிவன் கேட்டரிங் நிறுவனத்தின் குடும்பத்தினர் போட்டியை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தனர்.

இந்த கால்பந்துப் போட்டி அனைத்து வகையிலும் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பும், உதவிகளையும் நல்கிய அனைவருக்கும் பினாங்கு இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் எம்.ஸ்ரீ சங்கர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Pasukan Pahang Rangers menjuarai kejohanan bola sepak bawah 17 tahun PIFA 2025 – Sivan Challenge Cup, menewaskan Butterworth Rangers di final. Pravin Raj dipilih sebagai pemain terbaik, manakala Deshan dan Muvendiran menerima anugerah pemain muda serta penjaga gol terbaik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *