பினாங்கில் அடுக்குமாடியில் இருந்து விழுந்த 27 வயது இளைஞர் பலி!

- Muthu Kumar
- 04 Apr, 2025
பினாங்கு, ஏப்ரல் 4:
பினாங்கின் ஜார்ஜ் டவுனில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 22வது மாடியில் இருந்து விழுந்து 27 வயது இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணையில் எந்த விதமான வன்முறை சம்பவங்களும் நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்று திமூர் லாவுட் காவல்துறைத் துணைத் தலைவர் லீ ஸ்வீ சேக் தெரிவித்தார். அந்த நபர் கேட் லெபு மெக்காலமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்ட நிலையில், உடல் பினாங்கு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக லீ கூறினார்.சம்பவத்தின் புகைப்படங்கள் அல்லது கானொளிகளை பொதுமக்களுக்கு பரப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
Seorang lelaki berusia 27 tahun maut selepas jatuh dari tingkat 22 sebuah kondominium di George Town, Pulau Pinang. Polis menyatakan tiada petunjuk mengenai unsur jenayah dalam kejadian tersebut, dan siasatan kematian mendadak sedang dijalankan. Mayat dihantar untuk bedah siasat di Hospital Pulau Pinang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *