செயிண்ட் ஹெலியர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 42ஆவது விளையாட்டுப் போட்டி!

top-news
FREE WEBSITE AD

(வீ.இராஜேந்திரன்)

பகாவ், மார்ச் 30-

கடந்த 27.3.2025ஆம் நாள் வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் செயிண்ட் ஹெலியர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 42ஆவது விளையாட்டுப் போட்டி பள்ளித் திடலில் நடைபெற்றது.

மாணவர் அணிவகுப்பு. இறைவாழ்த்து, தேசியப்பண், பள்ளிப் பாடல், மாணவர் தலைவரின் உறுதிமொழிக்குப் பிறகு பள்ளியின் தலைமையாசிரியர் சு.விஜயன் உரையாற்றினார். அவர் தமதுரையில் முதலில் இப்பள்ளி விளையாட்டுப் போட்டிக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறினார்.

தொடர்ந்து பெ.ஆ.சங்கத் தலைவர் பெ.சுப்ரா உரையாற்றினார்.அதனை தொடர்ந்து இப்பள்ளியின் விளையாட்டுப் போட்டிக்கு சிறப்பு வருகை புரிந்த நெகிரி செம்பிலான் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் க.ஜெயபாலன் சிறப்புரையாற்றினார். அவர் தமதுரையில் தமிழ்ப்பள்ளிகளில் தங்கள் குழந்தைளை கல்வி கற்க தமிழ்ப்பள்ளியை தேர்வு செய்த பெற்றோர்களுக்கு முதலில் வாழ்த்து கூறினார். தொடர்ந்து எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளியே உங்கள் அனைவரின் தேர்வாகட்டும் என வருகையாளர்களை கேட்டுக் கொண்டார்.

இவ்விளையாட்டுப் போட்டியை தீப்பந்தம் ஏற்றி தொடக்கி வைத்தார் ஏ.ஐ.ஏ காப்புறுதி வட்டார இயக்குநர் செல்லத்துரை கருப்பன். தொடர்ந்து இவ்விளையாட்டுப் போட்டிக்கு நிதி உதவியும் வழங்கினார்.தொடர்ந்து விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது நேர் ஓட்டம், அஞ்சல் ஓட்டம், குழு விளையாட்டுகள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றது.

பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் கு.மணிசேகரன் தலைமையிலான நடுவர்கள் விளையாட்டுப் போட்டியை சிறப்பாக வழிநடத்தினார்கள்.போட்டியின் இறுதியில் அதிக புள்ளிகளை பெற்ற மஞ்சள் இல்லம் முதல் நிலையில் வெற்றி பெற்றது.

இவ்விளையாட்டுப் போட்டியின் சிறந்த விளையாட்டு வீரராக பச்சை இல்லத்தைச் சேர்ந்த கே.கெளஷிக்கும், சிறந்த வீராங்கனையாக மஞ்சள் இல்லத்தைச் சேர்ந்தஆர்.ஹஸ்மித்தாவும் தேர்வு பெற்றனர்.

Sekolah Tamil St. Helier mengadakan Sukan Tahunan ke-42 pada 27 Mac 2025. Majlis dirasmikan oleh Pengarah Wilayah AIA, Sellathurai Karuppan. Acara melibatkan perarakan, pertandingan sukan, serta penyertaan ibu bapa dan alumni. Rumah Kuning muncul juara keseluruhan, manakala K. Kaushik dan R. Hasmiththa dianugerahkan sebagai atlet terbaik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *