இரண்டு நாள்களில் 4,362 விபத்துகள்; 39 இறப்புகள்! - அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்

- Shan Siva
- 01 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல் 1: கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நாடு முழுவதும்
மொத்தம் 4,362 விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், இதன் விளைவாக 39
பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓப் செலாமாட்டின்
கீழ் போலீசார் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதால் இந்த புள்ளிவிவரங்கள்
வந்துள்ளன.
புக்கிட் அமான்
போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறை புள்ளிவிவரங்களின்படி, வெள்ளிக்கிழமை 2,322 விபத்துகளும் 32
இறப்புகளும் பதிவாகியுள்ளன.
சனிக்கிழமை 2,040
விபத்துகளும் ஏழு இறப்புகளும் பதிவாகியுள்ளன.
மார்ச் 29 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும் ஓப் செலாமாட்டில் கிட்டத்தட்ட 7,000 போலீசார் பணியில் உள்ளனர்!
Sebanyak 4,362 kemalangan dicatatkan di seluruh negara pada Jumaat dan Sabtu, menyebabkan 39 kematian. Operasi Selamat masih diteruskan dengan hampir 7,000 anggota polis bertugas bagi memastikan keselamatan jalan raya sepanjang tempoh operasi dari 29 Mac hingga 3 April.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *