புக்கிட் பிளாண்டோக், முகுந்தன் தமிழ்ப்பள்ளியின் 46ஆவது விளையாட்டுப் போட்டி!

top-news
FREE WEBSITE AD

(வி.இராஜேந்திரன்போட்டி)

போர்ட்டிக்சன், மார்ச் 25-

புக்கிட் பிளாண்டோக், முகுந்தன் தமிழ்ப்பள்ளியின் 46ஆவது விளையாட்டுப் போட்டி பள்ளி தலைமையாசிரியர் த.விஜயகுமாரி தலைமையில் கடந்த 23.3.2025ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பள்ளித் திடலில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

காலை 8.30 மணியளவில் மாணவர்களின் இல்ல அணிவகுப்பு, தேசிய கீதம், இறைவாழ்த்து, மாணவர் தலைவரின் உறுதி 5 பிறகு விளையாட்டுப் மொழிக்கு பிறகு போட்டி ஆரம்பமானது. தொடர்ந்து விளையாட்டு வீரர்களின் தீப்பந்த ஓட்டம், மாணவர்களின் இசைக்கேற்ற நடனம் மற்றும் சிலம்ப போர்க்கலை படைப்பு நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது.




இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சிவநேசன் முனியாண்டியின் வரவேற்புரைக்குப் பின் முன்னாள் நெகிரி மாநில துணைச்சபாநாயகர் டத்தோ ரவி முனுசாமி சிறப்புரையாற்றி விளையாட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்தார். மேலும், சிறப்பு விருந்தினராக போர்ட்டிக்சன் மாவட்டக் கல்வி இலாகா அதிகாரி, காவல்துறை அதிகாரி, புக்கிட் பிளாண்டோக் எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் கி. குணசேகரன், பிரமுகர்கள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

பாலர் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு, பெற்றோர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுக்கான விளையாட்டுகளும் இடம் பெற்றன. பள்ளி மாணவர்கள் இந்த விளையாட்டு போட்டியில் உற்சாகமாகக் கலந்து கொண்டு பரிசுகளை வாரி குவித்தனர். சிறந்த இல்ல அலங்கரிப்பு விருதினை மஞ்சள் இல்லமும் சிறந்த அணிவகுப்பிற்கான விருதினை நீல இல்லமும் வெற்றி பெற்றன.


ஒட்டு மொத்த வெற்றியாளராக சிவப்பு இல்லம் வாகை சூடியது. இப்போட்டியில் சிறந்த விளையாட்டு வீரராக ஜீவசுதன் கணேசனும் சிறந்த வீராங்கனையாக ராஷினி பாலாவும் வாகை சூடினர்.இளம் விளையாட்டு வீரராக ருத்திரன் ஆவடியாரும் இளம் வீராங்கனையாக நிவேதா தங்கராஜுவும் வெற்றி பெற்றனர். பிற்பகல் 12.30 மணிக்கு விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. இறுதியாக இந்த விளையாட்டுப்போட்டி சிறப்பாக நடந்தேற ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் த.விஜயகுமாரி நன்றி கூறினார்.

Sukan Tahunan ke-46 SJKT Bukit Plantok berlangsung meriah di bawah pimpinan Guru Besar Th. Vijayakumari. Pelbagai acara diadakan, termasuk perarakan rumah sukan, tarian, dan silambam. Rumah Merah muncul juara keseluruhan. Majlis disertai pegawai pendidikan, ibu bapa, dan tetamu khas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *