எம்ஐடிசியில் மலேசிய பைக் வாரத்தில் 50,000 பேர் பங்கேற்பர் - மலாக்கா இலக்கு

top-news
FREE WEBSITE AD




மலாக்கா, ஜூன் 3-
மலாக்கா அனைத்துலக வர்த்தக மைய சதுக்கத்தில் (எம்ஐடிசி)  ஜூன் 14 முதல் 16 வரை நடக்கவிருக்கும் மூன்று நாள் மலேசிய பைக் வீக்குடன் இணைந்து சுமார் 50,000 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பங்கேற்பதை மலாக்கா அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மலாக்கா கலை, கலாச்சார பாரம்பரிய சுற்றுலா எக்ஸ்கோ, டத்தோ அப்துல் ரசாக் அப்துல் ரஹ்மான், மலேசிய சூப்பர் பைக்கர்ஸ் அசோசியேஷன் இணைந்து ஏற்பாடு செய்யும் திட்டம் உயர் ஆற்றல் மோட்டார் சைக்கிள்கள் உரிமையாளர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பிரிவுகள், கிளாசிக் மோட்டார்சைக்கிள் உரிமையாளர்களையும் ஒன்றாக கொண்டு கூறினார்.
இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளிலிருந்து இந்தப் பெரிய அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள வாகன சங்கங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சுல்தான் இப்ராஹிமும் ஜூன் 15ஆம் தேதி மலேசிய பைக் வாரத்தில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
அப்துல் ரசாக் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இவ்விழாவில் சுல்தான் இப்ராஹிமின் மோட்டார் சைக்கிள்கள் உட்பட பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட சொத்துகள் எம்ஐடிசிஇன் பி,சி மண்டபங்களில் இலவசமாக பார்வையாளர்களுக்கு திறக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியுடன் இணைந்து, மொத்தம் 10 மோட்டார் சைக்கிள்கள், ஒரு புரோட்டான் எக்ஸ்50 கார் ஆகியவையும் கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்களுக்கான அதிர்ஷ்ட எண் குலுக்கலுக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மலாக்கா 2024 வருகை ஆண்டுடன் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கான வசதிகளை முழுமையாகத் தயார் செய்துள்ளோம், இது உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பல பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
முன்னதாக, கொன்வோய் மலேசியா அனைத்துலக கிளாசிக் பைக் நிகழ்ச்சியில் இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடு முழுவதிலும் இருந்து 800 கிளாசிக் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் கலந்து கொண்டதோடு மூன்று நாட்கள் மலாக்காவில் முகாமிட்டனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *