பாங்காக்கில் இன்றிலிருந்து வழக்கம்போல் மலேசியத் தூதரகம் இயங்கும்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 1: கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்து மற்றும் மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு மதிப்பீட்டிற்காக அதிகாரிகளால்  தாய்லாந்தில் உள்ள மலேசியத் தூதரகம் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்ட பின்னர், இன்றிலிருந்து மீண்டும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாங்காக்கைத் தாக்கிய நிலநடுக்கத்திற்குப் பிறகு அதிகாரிகளால்  சாத்தோர்ன் சாலையில் உள்ள குரோனோஸ் அலுவலக கோபுரத்தின் 17வது மாடியில் இருக்கும் மலேசியத் தூதரகம் மூடப்பட்டது.

இதனை அடுத்து, தாய்லாந்திற்கான மலேசியாவின் இடைக்கால பொறுப்பாளர் போங் யிக் ஜூய், அலுவலகக் கட்டிடம் சான்றளிக்கப்பட்ட பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு கட்டமைப்பு ரீதியாக பாதுகாப்பானது மற்றும் சேதமற்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 இந்நிலையில், குரோனோஸ் அலுவலக கோபுரம் மீண்டும் திறக்கப்பட்டவுடன், தூதரகம் இன்றிலிருந்து வழக்கம் போல் செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

Kedutaan Malaysia di Bangkok, yang ditutup sementara selepas gempa bumi di Thailand dan Myanmar, kini beroperasi semula. Bangunan di Sathorn Road disahkan selamat oleh jurutera bertauliah, membolehkan perkhidmatan kembali seperti biasa mulai hari ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *