மியன்மார் சென்ற மலேசிய மீட்புக் குழு பள்ளிகள் & வழிபாட்டுத்தலங்களில் கவனம் செலுத்தும்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 1: மியன்மாரின் சாகைங் மாவட்டத்தில் நிலநடுக்கப் பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதில் சிறப்பு மலேசிய பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழு (ஸ்மார்ட்) கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனமான நாட்மா குழுவின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மாவட்டத்தில் மூன்று இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறியது.

மோ கியா மசூதி, நியூ மா மசூதி மற்றும் நியாட் தனியார் பள்ளி ஆகியவற்றில் இவை நடத்தப்பட்டன.

அங்கு 20க்கும் மேற்பட்டோர் இன்னும் சிக்கியுள்ளதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.

MAS-01 (மலேசிய மனிதாபிமான உதவித் திட்டம்) குழு நேற்று பிற்பகல் நே பி டாவ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் 50 பேர் கொண்ட குழு 270 கி.மீ தரைவழிப் பயணத்தை மேற்கொண்டது. முன்னதாக 1 கோடி வெள்ளி நிதியை நிலநடுக்க நிவாரண உதவியாக மலேசியா வழங்கும் என்று பிரதமர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது!

Pasukan SMART Malaysia memberi tumpuan kepada usaha mencari dan menyelamat mangsa yang terperangkap di tempat ibadah dan sekolah akibat gempa bumi di daerah Sagaing, Myanmar. Misi ini melibatkan 50 anggota, dengan Malaysia turut menyumbang RM10 juta untuk bantuan bencana.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *