மலேசியாவின் முக்கிய ஏற்றுமதிகளை கடுமையாகப் பாதிக்கும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 4-

அமெரிக்காவின் 24 விழுக்காட்டு பரஸ்பர வரி விதிப்பினால் மலேசியாவின் முக்கிய ஏற்றுமதிகள் கடுமையாகப் பாதிக்கும்.

குறிப்பாக, கையுறைகள், பிளாஸ்டிக் பொருட்கள், மின்சார மற்றும் மின்னணுப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படலாம் என்று மலேசிய உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (எஃப்எம்எம்) எச்சரித்துள்ளது.

இப்பொருட்கள் மீதான 24 விழுக்காடு வரி அமல்படுத்தப்படும்போது அவற்றின் ஏற்றுமதிகள் குறையும். வேலை வாய்ப்புகள் குறையும். உள்ளூர் தயாரிப்பாளர்களும் மலேசியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் அமெரிக்கத் தொடர்புடைய பன்னாட்டு நிறுவனங்களும் தங்களின் விநியோகத் தொடர்பு சங்கிலியை தகவமைத்துக் கொள்ள வேண்டிவரும் என்று அச்சம்மேளனத்தின் தலைவர் சோ தியான் லாய் குறிப்பிட்டார்.

மலேசியா மீதான 24 விழுக்காடு வரி விதிப்பு
இம்மாதம் 9ஆம் தேதியன்று நடப்புக்கு வருகிறது. மலேசியா உட்பட 49 நாடுகள் அந்த வரிவிதிப்புக்கு இலக்காகி உள்ளன.வரி விதிப்புக்கான அரசு நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். செம்பு, தங்கம், வெட்டுமரம், மருந்துப்பொருட்கள் ஆகியவற்றுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் அந்த அறிவிப்பு குறித்து கருத்துரைத்த சோ தியான் லாய், இவ்வாண்டில் புத்ராஜெயா கூடுதல் வரி எதனையும் விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். பொருளாதார நிலை சவால்மிக்கதாக மாறிக் கொண்டிருப்பதைக் கருத்தில்கொண்டு அரசாங்கம் செயல்பட வேண்டும் என்றார்.

Malaysia bakal terjejas akibat cukai 24% yang dikenakan oleh Amerika Syarikat terhadap barangan eksport seperti beg tangan, plastik, dan barangan elektrik. FMM memberi amaran bahawa ia akan menjejaskan eksport, pekerjaan dan operasi syarikat tempatan serta pelabur asing.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *