புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு RM 3000 பண உதவி! - டான்ஸ்ரீ வின்சென்ட் டான் வழங்குகிறார்

- Shan Siva
- 03 Apr, 2025
சுபாங் ஜெயா, ஏப்ரல் 3: புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்து
சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தலா ஒரு குடும்பத்திற்கு RM3,000 பண உதவி டான் ஸ்ரீ வின்சென்ட் டானின்
பெர்ஜயா கேர்ஸ் அறக்கட்டளையால் உடனடியாக விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவத்தில்
பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க பண நன்கொடையை வழங்கத் தயாராக உள்ளதாக டான்ஸ்ரீ
வின்சென்ட் டான் தன்னை தொடர்பு கொண்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
தனியார் துறையின் ஆதரவு இப்போது அதிகரித்து வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க அதிகமான கட்சிகள் முன்வரும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *