மலாயாப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழி திணிப்பு?

top-news
FREE WEBSITE AD

(கு.தேவேந்திரன்)

கோலாலம்பூர், ஏப். 4-

கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழியைத் திணிக்கும் செயல்கள் நடந்து வருவது குறித்து இந்நாட்டிலுள்ள தமிழ் அமைப்புகள் இன்னமும் மௌனம் சாதிப்பது ஏன் என்ற கேள்வி தற்போது நாடு தழுவிய நிலையில் எழுந்து வருகிறது.

வழக்கொழிந்த சமஸ்கிருத மொழிக்கு இந்நாட்டில் அதுவும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வரங்கம் நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. மலேசியாவுக்கான இந்திய தூதரகம், மலாயாப் பல்கலைக்கழகம், மலேசிய இந்திய பாரம்பரிய சங்கத்துடன் இணைந்து "இந்தியாவில் சமஸ்கிருதத்தின் பங்கு-மலேசியாவின் வரலாறு இணைப்பு" என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை இம்மாதம் ஏப்ரல் 10ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் நடத்த விருக்கிறது.

இந்தக் கருத்தரங்கு இந்தியாவுக்கும் அப்போதைய மலாயாவிற்கும் இடையிலான ஆழமான மொழியியல் பரிமாற்றங்களை ஆராயவும் இதன் விளைவாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நவீன கால உறவுகளை ஆழப்படுத்தும் ஒரு பகிரப்பட்ட பாரம்பரியம் உருவாகும் என்றும், இந்தப் பகிரப்பட்ட பாரம்பரியம் கடந்த பல நூற்றாண்டுகளாக மலாய் மொழி சொற்களஞ்சியத்தில் சமஸ்கிருத சொற்கள் பயன்படுத்தப்படுவதன் நோக்கமாகவும் சமஸ்கிருத சொற்கள் - சமஸ்கிருத மொழியிலும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதன் நோக்கமாகவும் நடத்தப்படும் ஆய்வரங்கத்தின் நோக்கமாக கொண்டுள்ளது.

1950, 60ஆம் ஆண்டுகளில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு நீலகண்ட சாஸ்திரியால் ஆபத்து வந்தபோது தமிழ் எங்கள் உயிர் என்று முழங்கி மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு அரியாசனம் பெற்றுத் தந்தவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி. அவர் மறைந்தாலும் தமிழ் என்றும் அங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் அந்த பல்கலைக்கழகத்தில் தமிழவேள் உருவாக்கிய தமிழ் எங்கள் உயிர் முழக்கத்திற்கு இன்று சமஸ்கிருத வடிவில் மீண்டும் ஆபத்து வந்துள்ளது என்றால் அதன் பின்னணியில் உள்ள அந்த சதிகாரர்கள் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.தமிழ் வாழ்ந்த இடத்தில், தமிழ் படித்து தமிழாக உயிர்பெற்ற பல்கலைக்கழகத்தில் செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கு உயிரோட்டம் தருவது யார் என்கிற கேள்வி எழாமல் இல்லை.

மலேசியாவில் சமஸ்கிருத மொழியைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை இந்தியாவின் சங்கிகள் கொண்டு வருதற்கு நம்மவர்களும் துணை போகிறார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதால், தமிழ் சார்ந்த சமுதாயம் விழிப்பாக இருக்க வேண்டும் என்று இனம், மொழி சார்ந்த நலன் விரும்பிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

 Universiti Malaya akan menganjurkan seminar tentang peranan Sanskrit dalam sejarah Malaysia, mencetuskan kebimbangan dalam kalangan masyarakat India. Mereka mempersoalkan keperluan mempromosi bahasa yang dianggap pupus dan menyeru masyarakat India lebih peka terhadap usaha ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *