பெட்ரோல் நிலையத்தில் கார் தீப்பற்றியது - 2 பேர் காயம்!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர்பாரு. ஏப்.5-

பண்டார் பெர்மாஸ் ஜெயா, ஜாலான் பந்தாயிலுள்ள பெட்ரோல் நிலையத்திற்கு முன்புறம் நிகழ்ந்த விபத்தில் கார் ஒன்று தீப்பற்றியதில் 2 பேர் காயமுற்றனர். இச்சம்பவம் தொடர்பில் கடந்த புதன்கிழமை இரவு 8.21 மணிக்கு அவசர அழைப்பு பெறப்பட்டதாக ஜொகூர் ஜெயா தீயணைப்பு நிலையத்தின் நடவடிக்கை கமாண்டரும் 2ஆவது மூத்த அதிகாரியுமான எம்.கே.ஹரிதாஸ் தெரிவித்தார்.

இருந்த போதிலும் தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பு இவ்விருவரையும் பொதுமக்கள் வெளியேற்றி விட்டனர். நடவடிக்கைக் குழுவினர் அங்கு இரவு 8.32 மணிக்கு வந்து பார்த்ததில் விபத்தினால் ஒரு ஹோண்டா சிட்டி ரக கார் 75 விழுக்காடு தீப்பற்றியிருந்தது. இதில் உதவி வழங்கும் ஒரு தளத்தைப் பயன்படுத்தி தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டது.இவ்விபத்தில் 22 வயதுடைய ஓர் ஆடவருக்கும் 21 வயதுடைய பெண்ணுக்கும் காயமேற்பட்டது.

தீயணைப்புத் துறையின் இஎம்ஆர்எஸ் இயந்திரத்தில் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அவர்கள் இருவருக்கும் அவசர சேவை உதவி பிரிவால் தொடக்கக்கட்ட சிகிச்சை வழங்கப்பட்டது.2 தீயணைப்பு இயந்திரங்களில் 12 தீயணைப்புப் படையினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

தீ விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் மற்றும் மொத்த இழப்பீட்டுத் தொகை குறித்து விசாரணை செய்யப்படுகிறது. மீட்பு நடவடிக்கை இரவு 9.05 மணிக்கு முடிவுற்றதாக ஓர் அறிக்கையில் ஹரிதாஸ் குறிப்பிட்டார்.

Sebuah kereta Honda City terbakar  75% dalam kemalangan di hadapan stesen minyak di Bandar Permas Jaya, Johor Bahru. Dua orang cedera dan telah diselamatkan oleh orang awam sebelum bomba tiba. Punca kebakaran dan jumlah kerugian masih disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *