பார்சிலோனா அணி 2-1 கணக்கில் செவில்லா அணியை வீழ்த்தியது!
- Muthu Kumar
- 28 May, 2024
ஸ்பெயினில், 'லா லிகா' கோப்பை கால்பந்து 93வது சீசன் (2023-24) நடந்தது. இதன் கடைசி சுற்று லீக் போட்டியில் பார்சிலோனா, செவில்லா அணிகள் மோதின. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் பார்சிலோனாவின் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஒரு கோல் அடித்தார். இதற்கு 31வது நிமிடத்தில் செவில்லா வீரர் யூசுப் என்-நேசிரி ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி முடிவு 1-1 என சமநிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய பார்சிலோனா அணிக்கு 59வது நிமிடத்தில் பெர்மின் லோபெஸ் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய செவில்லா அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பார்சிலோனா அணி 38 போட்டியில், 26 வெற்றி, 7 'டிரா', 5 தோல்வி என 85 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்தது. ஏற்கனவே 95 புள்ளிகளுடன் (29 வெற்றி, 9 'டிரா', ஒரு தோல்வி) முதலிடத்தை உறுதி செய்த ரியல் மாட்ரிட் அணி 36வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
முதல் நான்கு இடம் பிடித்த ரியல் மாட்ரிட், பார்சிலோனா, ஜிரோனா, அத்லெடிகோ மாட்ரிட் அணிகள், சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *