2024ஆம் ஆண்டின் ஆசியாவின் குறைந்த கட்டண சேவை புதிய உயரத்திற்கு உயரும் ஏர்ஆசியா

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், மே 31-
ஏர்ஆசியா குழுமம், அதன் துணை நிறுவனங்களான ஏர்ஆசியா எக்ஸ், தாய் ஏர்ஆசியா எக்ஸ் ஆகியவை 2024ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த குறைந்த கட்டண சேவை என ஏர்லைன்ஸ்ரேதிங்ஸ்.கொம் ஆல் மதிப்புமிக்க ஏர்லைன் எக்ஸலன்ஸ் விருது பெற்றுள்ளது. 
இந்தப் பாராட்டு ஏர்ஆசியாவின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்கதாகும். தொலைநோக்கு நிறுவனர்களான டத்தோ கமாருடின் மெரானூன், டோனி பெர்னாண்டஸ் ஆகியோரால் 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இரண்டு விமானங்களுடன், விமான நிறுவனம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாக ஏர்ஆசியா கோலாலம்பூரில் ஒரு சிறிய செயல்பாட்டில் இருந்து ஆசிய விமானப் போக்குவரத்துத் துறையின் அதிகார மையமாக மாறியுள்ளது.
ஏர்ஆசியா குழுமம் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியாவில் உள்ள அதன் தளங்களில் இருந்து 165க்கும் மேற்பட்ட இடங்களை இணைக்கும் 255க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டுள்ளது.
ஏர்லைன்ஸ்ரேதிங்ஸ்.கொம் இன் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி தாமஸ், அசாதாரண சாதனைகளுக்காக ஏர்ஆசியாவின் தலைமையைப் பாராட்டினார்.
டோனி பெர்னாண்டஸ், குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி போ லிங்கம், ஏர்ஆசியா, தலைமை நிர்வாக அதிகாரி பென்யமின் இஸ்மாயில் உட்பட அவரது குழு, இந்த விமான நிறுவனங்களை சந்தை ஆதிக்கத்திற்குத் தூண்டியுள்ளது.
ஏறக்குறைய 800 மில்லியன் பயணிகளுக்குப் பயணத்தை அணுகக்கூடியதாகவும் மலிவு விலையாகவும் மாற்றியுள்ளனர். விதிவிலக்கான மதிப்பு, அற்புதமான பயண அனுபவத்தை வழங்குகிறார்கள்.
இந்த அங்கீகாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், கெபிட்டல் ஏ இன் தலைமை நிர்வாக அதிகாரி, ஏர்ஆசியா குழுமத்தின் ஆலோசகர் டோனி பெர்னாண்டஸ் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்த விருது விமான நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு, மூத்த குழு உறுப்பினர்கள், எதிர்பார்ப்புகளை மீறிய எண்ணற்ற ‘ஆல்ஸ்டார்களுக்கு’ சொந்தமானது. 
உலகம் முழுவதும் அதிக உயர்தர, குறைந்த கட்டண பயண விருப்பங்களை வழங்குவதன் மூலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, விரிவாக்கத்திற்கு கடமைப்பட்டுள்ளோம்.
போ லிங்கம் இந்த உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். அதிகரித்து வரும் பயணத் தேவையைப் பூர்த்தி செய்ய 400க்கும் மேற்பட்ட புதிய, அதிநவீன விமானங்களைச் சேர்ப்பதாக அறிவித்தார். 
குறைந்த விலை என்பது குறைந்த சேவையைக் குறிக்காது. ஆசியாவிற்குள் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிக மதிப்பு, தேர்வை வழங்க அர்ப்பணித்துள்ளோம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *