எரிவாயுக் குழாய் வெடிப்பினால் மாசிமோ ரொட்டி தயாரிப்பு பாதிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 4-

புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று எரிவாயுக் குழாய் வெடித்து தீப்பற்றிய சம்பவத்தைத் தொடர்ந்து "மாசிமோ ரொட்டிப் பொருட்களின் தயாரிப்புக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயுக் குழாய் வெடித்தக் காரணத்தினால் தனது தொழிற்சாலைக்கான திரவமய இயற்கை எரிவாவு விநியோகம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால், ரொட்டித் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று மாசிமோ ரொட்டி வகைகளைத் தயாரிக்கும் நிறுவனமான “தி,, இத்தாலியன் பேக்கர் செண்டிரியான் பெர்ஹாட்" தெரிவித்தது.

இன்று தொடங்கி அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரையில் கடைகளில் போதுமான மாசிமோ ரொட்டிகள் கிடைக்காமல் போகலாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு எங்களின் நிறுவனம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரத்தில், எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்துவரும் வாடிக்கையாளர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறுகிறோம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.மாசிமோ ரொட்டித் தயாரிப்பு ஆலை போர்ட் கிள்ளானில் அமைந்துள்ளது.

Letupan paip gas di Putra Heights menyebabkan pengeluaran roti Massimo terganggu selepas bekalan gas asli cecair ke kilang dihentikan. Massimo memohon maaf atas kekurangan stok di pasaran dan berterima kasih atas sokongan pelanggan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *