எரிவாயு குழாய் இருப்பதாக நம்பும் இடத்தில் கழிவுகள் எரிப்பு!

- Muthu Kumar
- 04 Apr, 2025
சிரம்பான், ஏப்ரல் 4:
சிலாங்கூர் புத்ரா ஹைட்ஸில் பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் வெடிப்பு நிகழ்ந்த சில நாட்களுக்குப் பிறகு, தாமான் புக்கிட் செண்டாயனில் நிலத்தடியில் உள்ள எரிவாயு குழாய் இருப்பதாக அதிகாரிகள் நம்பும் இடத்திற்கு அருகிலுள்ள அதிக ஆபத்துள்ள பகுதியில் பொறுப்பற்ற நபர்கள் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.
கழிவுகள் எரிக்கப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ சுமார் 200 சதுர அடி பரப்பளவை உள்ளடக்கியது என்றும், இது ஒரு சிறிய அறை அல்லது கார் பார்க்கிங் இடத்தின் அளவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்து குறித்து காலை 8.30 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்ததாக சிரம்பான் 2 தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூத்த தீயணைப்பு அதிகாரி முகமது நிஜாம் யோம் கூறினார்.இதனை அடுத்து காலை 10.14 மணிக்கு தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்,
எரியும் பகுதிக்கு அருகில் எரிவாயு குழாய் பாதையைக் குறிக்கும் எச்சரிக்கை பலகை இருந்தும் இச்செயலைச் செய்திருப்பது கவலைக்குரியது என்று அவர் கூறினார்.
Tindakan membakar sampah berhampiran paip gas bawah tanah di Taman Bukit Sendayan mencetuskan kebimbangan selepas insiden letupan paip gas di Putra Heights. Kebakaran seluas 200 kaki persegi berjaya dipadamkan pada jam 10.14 pagi. Papan amaran berhampiran lokasi tidak diendahkan oleh individu tidak bertanggungjawab.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *