ஈப்போ அருகே லாரி விபத்து! தந்தை - மகன் பலி!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, மார்ச் 18:

இன்று காலை ஈப்போ அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (பிளஸ்) KM 331.8 இல் வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் மணல் ஏற்றப்பட்ட டிரெய்லர் லாரி பருத்தி ஏற்றப்பட்ட டிரெய்லரின் பின்புறத்தில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் தந்தையும் அவரது மகனும் தீயில் கருகி இறந்தனர்.

விபத்து குறித்து செயல்பாட்டு மையத்திற்கு அவசர அழைப்பு வந்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமட் கூறினார்.பிடோர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு காலை 7.57 மணிக்கு மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

40 வயதுடையதாக   நம்பப்படும் ஆடவர்,  எரிந்த வாகனத்திற்குள் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார். இதற்கிடையில், 40 வயது நபரின்  20 வயது மகனும்  எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக  அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Dua beranak maut dalam kebakaran selepas treler bermuatan pasir melanggar belakang treler kapas di KM 331.8 Lebuhraya PLUS arah utara dekat Ipoh. Mayat bapa (40) dan anaknya (20) ditemui rentung dalam kenderaan dan diserahkan kepada polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *