பெட்டாலிங் ஜெயா பிஜேஎஸ் 1 தமிழ்ப்பள்ளிக்கு 5 ஆயிரம் வெள்ளி நன்கொடை- டத்தோ பத்மநாபன்!

- Muthu Kumar
- 03 Jan, 2025
(இரா.கோபி)
பெட்டாலிங் ஜெயா, ஜன. 3-
பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள பிஜேஎஸ் தமிழ்ப்பள்ளியில் கிட்டத்தட்ட 175 மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த மாணவர்களிலிருந்து 42 மாணவர்களை கால்பந்து விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அப்பள்ளியின் இணைப்பாளர் துணைத் தலைமையாசிரியர் சிவசேகர் தெரிவித்தார்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தொழிலதிபர் டத்தோ பத்மநாபன் கால்பந்து, ஜெர்ஸி வழங்கினார். மேலும் அப்பள்ளியின் வளர்ச்சிக்காக நன்கொடையாக 5 ஆயிரம் வெள்ளி வழங்கினார்.மேலும் சிறப்பு வருகை புரிந்த தொழிலதிபர் ராஜேஸ்வரன் பிடிஎல் எக்காடமிக்கு 2ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினார். சிறப்பு வருகை புரிந்த பிரதமரின் அரசியல் செயலாளர் ஜோநாதன் வேலு கூறுகையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நாம்தான் பல வழிகளில் உதவிகளை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
நம் இந்திய மாணவர்கள் கல்வி மட்டுமல்லாமல் விளையாட்டு துறைகளிலும் அதிக சாதனை படைத்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.இப்பள்ளியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கால்பந்து குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் சிறப்பு வருகை புரிந்த டத்தோ பத்மநாபன் கூறுகையில், 42 மாணவர்களுடன் மாணவிகளும் கால்பந்து விளையாடுவது வரவேற்கக்கூடியது என்று அவர்தெரிவித்தார்.
விளையாட்டு துறைகளில் அதிகம் நம் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். அதே சமயம் கல்விக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இப்பள்ளிக்கு சிறப்பு வருகை புரிந்து நன்கொடை வழங்கிய அனைவருக்கும்
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இரா. லோகேஸ்வரன் தலைமையாசிரியர் திருமதி
ராஜலட்சுமி நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *