சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்தில் ஜெயம்ரவி,நஸ்ரியா,அதர்வா ,துல்கர்!

top-news
FREE WEBSITE AD

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அமரன்.இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவரது 23வது படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த் நாயகியாக நடிக்க பிஜு மேனன், டான்ஸிங் ரோஸ் சபீர், விக்ராந்த், வித்யூத் ஜம்வால் என பலரும் நடித்து வருகின்றனர்.இயக்குனர் முருகதாஸ் இயக்கும்  இப்படத்தை முடித்த கையோடு டான் பட இயக்குனர் சிபிசக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் அவரது 25 - வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவருவதை நம்மால் காண முடிகிறது.அந்த வகையில், தற்போது ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.அதாவது, சிவகார்த்திகேயன் நடிக்க போகும் அவரது 25 - வது படம் சுமார் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்போவதாகவும், இந்த தொகை வெறும் படத்திற்கானது மட்டுமே. நடிகர்,இயக்குனர் மற்றும் நடிகையின் சம்பளம் இந்த பட்ஜெட்டில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி - விஜய் வர்மா, ஸ்ரீலீலா - நஸ்ரியா, அதர்வா - துல்கர் மற்றும் சிவகார்த்திகேயன் - சூர்யா என்ற பெயரில் நடிக்கிறார்கள் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் தான் இசை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *