PUTRA HEIGHTS வெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தலா RM 1,000 உடனடி நிதி! – பூச்சோங் நாடாளுமன்றம்!

top-news

ஏப்ரல் 2,

நேற்று Putra Heights எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட Kampung Kuala Sungai Baru , Kampung Tengah குடியிருப்புவாசிகளின் குடும்பங்களுக்குத் தலா RM 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படுவதாகப் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் Yeo Bee Yin இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்டிருக்கும் குடியிருப்புவாசிகளின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நிதி ரொக்கமாக வழங்கப்படவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் பூச்சோங் நாடாளுமன்ற அலுவலகத்திலிருந்து இந்த நிதியை ரொக்கமாகப் பெறலாம் என அவர் தெரிவித்தார். Kampung Kuala Sungai Baru , Kampung Tengah க்குடியிருப்புப் பகுதி வாழ் மக்களுக்கான முதற்கட்ட நிதியுதவி இது என்றும், மேலதிகமான நிதியுதவிகளைப் பூச்சோங் நாடாளுமன்ற அதிகாரிகள் மூலமாக மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்றும் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் Yeo Bee Yin நம்பிக்கை தெரிவித்தார்.

Ahli Parlimen Puchong, Yeo Bee Yin, mengumumkan bantuan tunai RM1,000 bagi setiap keluarga yang terjejas akibat letupan paip gas di Putra Heights. Bantuan diberikan secara tunai untuk memenuhi keperluan segera mangsa. Bantuan tambahan akan disalurkan kemudian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *