பேருந்து விபத்துக்குள்ளானதில் சேதமடைந்த வீடு!

- Sangeetha K Loganathan
- 01 Apr, 2025
ஏப்ரல் 1,
கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் பேருந்து சாலையிலிருந்து விலகி சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை 3 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை Mersing சாலையில் உள்ள KAMPUNG SAWAH குடியிருப்புப் பகுதியில் இவ்லிபத்து நிகழ்ந்ததாகவும் பேருந்து ஓட்டுநர் படுகாயம் அடைந்த நிலையில் பேருந்திலிருந்த பயணிகளும் வீட்டிலிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கானக் காரணத்தைக் காவல்துறை விசாரித்து வருவதாகவும் விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Sebuah bas ekspres hilang kawalan dan merempuh sebuah rumah di Kampung Sawah, Mersing, pada pukul 3 pagi. Pemandu bas cedera parah manakala penumpang dan lima penghuni rumah hanya mengalami kecederaan ringan. Tiada kemalangan jiwa dilaporkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *