தாமஸ் கோப்பையை 11ஆவது முறையாக வென்றது சீனா

top-news
FREE WEBSITE AD

செங்டு, மே 6-
 செங்டு விளையாட்டு மையத்தில் நேற்று நடந்த 2024ஆம் ஆண்டு தாமஸ் கோப்பை இறுதிப் போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சீனா தனது 11ஆவது பட்டத்தை வென்றது.
உலகின் இரண்டாம் நிலை ஆடவர் ஒற்றையர் ஆட்டக்காரர் ஷி யு குய் முதல் செட்டில் ஆண்டனி சினிசுகா ஜின்டிங்கை 21-17 என்ற கணக்கில் தோற்கடித்து முதல் புள்ளியைப் பெற்றார்.
ஷி யு கியின் உறுதியான ஆட்டம், ஆல் இங்கிலாந்து 2024ஆம் ஆண்டு சாம்பியனான ஃபஜர் அல்ஃபியன்-முஹம்மது ரியான் ஆர்டியாண்டோவை 21-18, 17-21, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இதற்கிடையில், மூன்று முறை சாம்பியனான இந்தோனேசியாவை இறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சீனா 16ஆவது முறையாக உபெர் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதும்  குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *