மலாய்க்காரர்களின் வணிகக் கடைகள் வெளிநாட்டினரால் ஆக்கிரமிப்பு! - DBKL நடவடிக்கை!

top-news

ஏப்ரல் 1,

தலைகரில் மலாய்க்காரர்கள் கூடாரம் அமைத்து வணிகம் செய்து வந்த நிலையில் நோன்புப் பெருநாளுக்காகக் கடைகள் மூடப்பட்டதாகவும் தற்போது வெளிநாட்டினர்கள் அப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து வணிகம் நடத்தி வருவதாகப் பாதிக்கப்பட்ட உள்ளூர் வணிகர் புகார் அளித்த நிலையில் தலைநகரில் வணிகத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர்களின் 9 வணிகக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.


JALAN SILANG, JALAN BUKIT BINTANG, JALAN KHOO TEAK EE, ஆகிய தலைநகரின் முக்கிய சாலைகளில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் உரிமம் இல்லாமல் வணிகம் செய்த 9 வணிகக் கூடாரங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது. சம்மந்தப்பட்ட சாலையில் உள்ளூர் வணிகர்கள் கணிகம் செய்து வந்த நிலையில் தற்காலிகமாக BAZAR RAMADAN பகுதியில் அவர்கள் வணிகம் செய்து வந்த நிலையில் அவர்களின் பழைய வணிகத் தலங்களில் வெளிநாட்டினர்கள் ஆக்கிரமித்துள்ளதாக கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.

DBKL mengambil tindakan terhadap sembilan gerai perniagaan warga asing di Kuala Lumpur yang beroperasi tanpa kebenaran selepas peniaga tempatan berpindah ke Bazaar Ramadan. Operasi ini dijalankan di Jalan Silang, Jalan Bukit Bintang, dan Jalan Khoo Teak Ee.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *